பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2014

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஏதாவது குறிப்பிடத்தக்க தகவலின் அடிப்படையில் அனந்தி சசிதரன் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு,
அவரது கணவன் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவராக இருந்தார் என்ற அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
நோர்வேயின் ஏற்பாட்டில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட போது வடக்கு கிழக்கில், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவலை மேற்கொள்வதற்காகவே, விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவை உருவாக்கியதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.