பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2014

சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு தண்டனை
சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான சயுர என்ற கப்பல் மீது நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு புலி உறுப்பினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாண்டு காலம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லலிதா ஜயசூரிய இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்வதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த ஆறு புலிச் சந்தேக நபர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சயுர கப்பலை தாக்கியமை, கடற்படையினரை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்திரதாஸ் வசீகரன், மரியதாஸ் என்ஜலோ, பீட்டர் பியோமேசன், ஜெயசிங்கம் ஜெயமோகன், சிரில் ஜூன் கிரிசாந்த மற்றும் குமார் அந்தனி ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.