பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2014

ஜெனிவா பிரேரணையை வலுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை மேலும் வலுச்சேர்க்க முயற்சிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் மார்க் சைமண்ட்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பிரித்தானிய வெளிவிவகார திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.