பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

இலங்கை பலமிக்க நாடாக செயற்படுவதை விரும்பாதவர்களே மனித உரிமைகள் குறித்து குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை மற்றும் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவித்தமை போன்ற செயல்கள் மனித உரிமைகளை காக்கும் நாடு என்பதற்கான உதாரணங்களாகும்.
எனினும் இதனை கருத்திற்கொள்ளாது நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களே மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தேடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தென்மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.