பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவின் புதிய தூதரகம் அமைக்கவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த இடத்திலுள்ள 9 ஏக்கர் காணியை இலங்கை அரசாங்கம், ரஸ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன
நடமாட்டம் அற்ற பிரதேசமாக உருவாக்கி தருவதற்கும் இலங்கை அரசாங்கம் ரஸ்யாவுக்கு உறுதியளித்துள்ளது.
அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், ரஸ்ய தூதரகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்படும் ஆபத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்களின் பரம்பரையினர் பௌத்தலோக மாவத்தையில் சுமார் 100 வருடங்களாக வசித்து வருகின்றனர்.