பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்! பேரவைத் தலைவர் நடவடிக்கை
 
அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். 
முன்னதாக திமுக தலைவர் கலைஞர் பற்றி அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு சென்று முற்றுகையிட்டனர். அதிமுகவினரின் அவதூறு பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதிமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.