திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே, ஆதரவாளர்கள் பயங்கர கோபத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய அழகிரிக்கு, தூது விடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், ராகுல் ரத்த தான இயக்கத்தை சேர்ந்தவருமான பிரம்மா இந்த போஸ்டரை ஒட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி கொடியின் வர்ணத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் அந்த போஸ்டரில் இருக்கும் வரிகள் அழகிரியை காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுப்பது போல அச்சிட்டப்பட்டு இருக்கிறது.
ஊரிடத்தில் பகை என்றால் உறவிடத்தில் முறையிடலாம்!...உறவிடத்தில் பகை என்றால் யாரிடத்தில் செல்வோம்!.... அழைக்கிற(ரி) இடத்திற்கு வா!
என்பதுதான் அந்த போஸ்டர் வாசகம். |