பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

தென் சூடானுக்கான தற்காலிக தடை நீக்கம்

இன்று முதல் வேலைவாய்ப்புக்காக இலங்கையர் செல்லலாம்

கடந்த சில மாதங்களாக தென் சூடானில் அரசுக்கும் புரட்சிக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வந்ததால் அந்நாட்டில் குழப்பநிலை தோன்றியிருந்தது. இதனால் தென் சூடானுக்கு இலங்கையரை வேலைவாய்ப்பு க்காக அனுப்புவதை பணியகம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. தற்போது தென் சூடானின் அரசுக்கும் புரட்சிக்காரர்களுக்கும்
இடையே சுமுகநிலை ஏற்பட்டுள்ளதால் நாடு அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. இதனை கருத்திற்கொண்டு சூடானுக்கு இலங்கையரை அனுப்புவதற்கான தற்காலிக தடையை நீக்கி இன்று முதல் பதிவுகளை ஆரம்பிக்குமாறு அமைச்சர் டிலான் பெரேரா பணியகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி எந்தவித தடையும் இன்றி இன்று முதல் தென்சூடானில் வேலை வாய்ப்புக்காக இலங்கையருக்கு செல்ல முடியும் என்றும் பணியகம் தெரிவிக்கிறது. தென்சூடானில் இலங்கைக்கான தூதரகம் ஒன்று இல்லாத போதும் சூடானுக்கான இராஜதந்திர நடவடிக்கைகளை உகண்டாவிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக செய்யப்படுகிறது.
எனினும் தென்சூடானில் மீண்டும் ஒரு அமைதியின்மை நிலை ஏற்படுமானால் இது தொடர்பாக செயற்படுவது குறித்து விளிப்புடன் செயற்படுவதாகவும் பணியகம் அறிவிக்கிறது.