திமுகவில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணிய சுவாமி, தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன்.
என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை.
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும்.
ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள்.
அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது, அதே போன்று திமுகவும் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார். |