பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

ஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது புகார்
திருமணமான ஒரு குழந்தைக்கு தந்தையான ஆண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
களனி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பெண் பொலிஸ் பரிசோதகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீட்டில் மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்த போது குறித்த ஆணை கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடத்திச் சென்றதாக மனைவி பேலியகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வத்தளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் செயலாளராகவும், முக்கிய விளையாட்டுப் போட்டியொன்றின் நடுவராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.