பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2014

    அழகிரியா? ஸ்டாலினா?இன்று பலப்பரீட்சை

மு.க.அழகிரி தனது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஜன.30) மதுரையில் அதிக அளவில் தனது ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளார்.

அதைப்போல மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதில் ஸ்டாலினும் தனது ஆதரவாளர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்யத் திட்டமிட்டுள்ளார். கட்சியில் தாற்காலிகமாக நீக்கப்பட்ட பிறகு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் மு.க.அழகிரி உள்ளார். இதனால் கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அதிகளவில் அவர் கூட்டத்தைத் திரட்ட முடிவு செய்துள்ளார். நடிகர் நெப்போலியன், ரித்திஷ், கே.பி.ராமலிங்கம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் பெரிய அளவில் மதுரையில் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் மயிலாப்பூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
அழகிரியின் பிறந்த நாளுக்குச் செல்லும் கூட்டத்தை விட, அதிகளவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்போர் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் நோக்கமாக உள்ளது.
இதனால் இந்த இரு நிகழ்ச்சிகளும் ஸ்டாலின், அழகிரிக்கான பலப்பரீட்சையாகவே திமுகவினரால் பார்க்கப்படுகிறது.