பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014


சென்னை,கோவை,மதுரை,காஞ்சியில் அழகிரி உருவபொம்மை எரிப்பு
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியது குறித்து, திமுக தலைவர் கலைஞர் இன்று செய்தி யாளர்களிடம் விளக்கம் அளித்தார்.  அப்போது வீட்டிற்குள் அழகிரி நடந்துகொண்ட விதம் பற்றி விவரித்தார்.  இதையடுத்து
திமுகவினர் அழகிரி ஆவேசம் அடைந்துள்ளனர்.  


சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கோவையில் திமுகவினர் அழகிரியின் உருவபொம்மையை எரித்தனர்.
மதுரையில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமாரின் ஆதரவாளரும், அலங்காநல்லூர் இளைஞரணி அமைப் பாளர் கல்யாணகுமார் தலைமையில் திமுகவினர் திரண்டு வந்து, கூடல்நகரில் அழகிரி உருவபொம்மையை எரித்தனர்.

 சென்னையில் தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் அழகிரியின் உருவ பொம்மையை எரித்தனர்.