பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

ஜனநாயக்கட்சி அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

முன்னாள் இராணுவத்தளபதி  சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சியினர் அரசுக்கெதிராக 'ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை முன்னெடுத்தனர்.
 
குறித்த ஆர்ப்பாட்டம் மருதானையில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிர நிலையம் வரை சென்றது. அதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்  கலந்து கொண்டனர்.
 
கசினோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலவசக் கல்விக்கு ஆதரவாகவும் மற்றும் அரசின்  ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.