பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014



பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்தினமும் மதுபான விருந்து, ஆடம்பர வாழ்க்கை
அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த
அமெரிக்கப் பெண்ணொருவர் இந்தியர் ஒருவருடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமண பந்தத்தில்
இணைந்துகொண்டு ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஏட்ரியானா பெரல் (41) என்ற பெண்ணே தனது கணவரான முகேஷ் குமார் (25) என்பவருடன் இணைந்து ஹரியாணா மாநிலத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தில் வசிக்கிறார்.
ஏட்ரியானா தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுவதுடன் ஏனைய வீட்டு வேலைகளை சகஜமாக செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பேஸ்புக் மூலம் இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறி திருமணம் இனிதே நிறைவடைந்துள்ளது.
"எனக்கு முகேஷ் உடன் வாழும் இந்த சந்தோஷமான வாழ்க்கை பிடித்திருக்கிறது. எதற்காகவும் இந்த சந்தோஷத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என ஏட்ரியானா பெரல் தெரிவித்துள்ளார்.