பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2014

அதிமுக சீட் தர ரெடியானால் நான் போட்டியிட ரெடி: சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சீட் தந்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில், சமத்துவ மக்கள் கட்சியின் 2வது மாநில மாநாடு பிப்ரவரி 16ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள பொருட்காட்சி திடலில் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம். அதிமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன். சீட் பற்றி கவலைப்படவில்லை.
மேலும் கூட்டணி தலைவர் முதல்வர் ஜெயலலிதா சீட் தந்தால் போட்டியிடுவோம். தேர்தலுக்குப் பின் தொங்கு பாராளுமன்றம் அமையும் என்றும் அப்போது 3ம் அணி சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக பொறுப்பு ஏற்பார் எனவும் கூறியுள்ளார்.