பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014


பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்
 

பசங்க, நாணையம், ஈசன், சுப்பிரமணியபுரம் போன்ற சினிமாக்களுக்கு இசைமைத்த பிரபல இசைய மைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி சென்னை அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் இன்று மதியம் 1 மணிக்கு புகார் மனு கொடுத்தார்.



  அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது... “நான் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கிறேன். எனக்கும்  திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தனுக்கும் கடந்த 1991-ல்  திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவமுறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள்  ஆகிவிட்டது.  எங்களுக்கு  ஷில்பா என்ற மகளும் சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன்  ஜேம்ஸ் வசந்தனுக்கு அநேக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால்  எங்களுக்குள்  அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவியான ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார். ஆனால், தற்போது அவரையே தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு  கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று  காவல்துறையில் புகார் மனு கொடுத்துள்ளார்.
 இதுகுறித்து அடையாறு மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றார்.