பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

கோவை : ரயில் மோதி பலியான 3 யானைகளுக்கு அஞ்சலி
 கோவை அருகே ரயில் மோதி பலியான யானைகளுக்கு 6வது ஆண்டாக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இரவில் 3 யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன.
அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் மோதி 3 யானைகளும் அதே இடத்தில் இறந்தன. இதில் ஒரு பெண் யானையின் வயிற்றில் இருந்த குட்டி வெளியே வந்து விழுந்து இறந்தது.


யானை தகனம் செய்யப்பட்ட இடத்தில், அப்பகுதி மக்கள் விநாயகர் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இறந்த யானைகளின் 6வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 4ம் தேதி கிராம மக்கள் துக்கம் அனுசரித்தனர்.


அன்றைய தினத்தில் குரும்பபாளையம், மதுக்கரை பகுதி மக்கள் யானைகள் இறந்த இடத்தில் சடங்கு செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானைகள் போட்டோக்களை ஊரின் பல இடங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். கிராம மக்கள் கூறுகையில், யானைகள் ரயில் மோதி இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்களாக பாலக்காடு மெயின் ரோடு வழியாக எப்போதாவது ஓரிரு யானைகள் எங்கள் கிராமத்துக்குள் வருகின்றன. அந்த யானைகளை நாங்கள் விரட்டுவதில்லை என்றனர்.