பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

அல்ஜீரியாவில் விமான விபத்து: 103 பேர் பலி

அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மலையின் மோதி வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்ஜீரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆம் எல்போவாகி மாகாணத்தில் ராணுவ விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறியதில் விமானத்தில் இருந்த அனைவரும், அதாவது 103பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விமானத்தில் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கான்ஸ்டன்டைன்-எல் போவாகி இடையே சென்றபோது தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவும், அவசரஊர்தியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.