பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

ஜெயலலிதா பிரதமர் ஆவார்;அவருக்கு மோடி ஆதரவு அளிப்பார்: மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம்,   ‘’வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் அதிக அளவு இடங்களில் வெற்றி
பெறும். மோடி– ஜெயலலிதா இடையே நல்ல நட்பு உள்ளது. எனவே ஜெயலலிதா பிரதமர் ஆவார். அவருக்கு மோடி ஆதரவு அளிப்பார்.

ஜெயலலிதா பிரதமர் ஆனால் விலைவாசி குறையும், தீவிரவாதிகள் பயம் இருக்காது’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும்,  ‘’பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.
சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை என்று இருப்பதை இந்து சமய அறநிலையத்துறை என மாற்ற வேண்டும்’’என்று கூறினார்.