பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

சாலை விபத்து: திருமண கோஷ்டியினர் 16 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கார் ஒன்று வேகமாக வந்த டிரக்குடன் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.


மால்டா நகரத்தில் கலௌடிகி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் காரும், டிரக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.