பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014


எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் தெலுங்கானா விவகாரம், தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி,
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் எந்த அலுவலும் மேற்கொள்ள முடியாமல் பாராளுமன்றம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றம் துவங்கியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை காலை 11.11 வரையும், மக்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 2 மணி வரையும், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.