பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2014

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இன்றும் இரண்டு 
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 28ஆவது தடவையாக இன்றைய தினம் தோண்டப்பட்டபோது இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.


மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் மேற்படி மனித புதைகுழியை தோண்டும் பணியை முன்னெடுத்தனர்.

இதன்போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.  நாணய வடிவிலான தடையப் பொருளொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் தொகை 77 ஆக அதிகரித்துள்ளது.

மேற்படி மனித புதைகுழியின் 29ஆவது தடவையாக நாளை சனிக்கிழமையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்  முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.