பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2014

தீர்வு கிடைக்கும்வரை புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பாதீர்கள்;ஆஸிக்கு அன்ரனி ஜெயநாதன் வேண்டுகோள் 
தமிழர்களுக்கு நிரந்தர  தீர்வு கிடைக்கும்வரை வட மாகாண தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் மூடிக்கு வடமாகாண பிரதிஅவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

போரினாலும் அதனைத் தொடர்ந்து நிலவிய அச்சுறுத்தல் காரணமாகவும் வாழ்வாதாரம் முற்றாக அழிந்துள்ளது.

அத்துடன் பல்வேறுபட்ட உயிர் பாதுகாப்பின்மை காரணமாக தம்மிடம் எஞ்சியுள்ள காணிகளையும் தங்க ஆபரணங்களையும் விற்றே தங்கள் நாட்டிற்க்கு புகலிடம் கோரி இலங்கையின் வடமாகாண தமிழர்கள் ஆபத்தான கடல் பிரயாணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

மேலும் பலநூற்றுக் கணக்காணவர்கள் கடலில் தமது உயிர்களை இழந்தும் உள்ளனர். இவ்வாறு வந்து சேரும் தமிழர்களை அவுஸ்ரேலிய  அரசாங்கம் மீண்டும் இலங்கைக்கு  அனுப்புவதால் நான் மிகவும் கவலையடைகின்றேன்.

இது குறித்து பின்வரும் விடையங்களை தங்களுக்கு அறியத்தருவதுடன் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பவேண்டாமென்று தங்கள் மூலமாக அவுஸ்ரேலிய அரசாங்கத்தையும் அவுஸ்ரேலிய மக்களையும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

01. புகலிடம் கோரி தங்கள் நாட்டில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கையில் பாதுகாப்பாக வாழ முடியாதவர்கள்.

02. போரினால் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து எஞ்சிய காணிகளையும் உடமைகளையும் விற்ற பணத்தைக் கொண்டே தங்கள் நாட்டிற்கு வந்தனர்.

03. இவர்களை திருப்பி அனுப்பினால் இலங்கையில் இவர்கள் வாழ்வதற்கான வாழ்வாதார வழிகள் எதுவுமேயில்லை.

04. 31.12.2013. வரை புகழிடம் கோரிவந்த தமிழர்களையாவது இலங்கைக்கு திருப்பியனுப்பாது பாதுகாக்குமாறு வேண்டுகின்றேன்.

05. இலங்கையில் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே குறித்த 5 விடையங்களையும் கருத்தில் கொண்டு புகழிடம் கோரும் வடமாகாண தமிழ் மக்களுக்கு சாதகமாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் கடிதம் மூலமும் தொலைநகல் மூலமும் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இதேவேளை வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் இறுதிக்கட்ட யுத்தத்தினை நேரடியாக சந்தித்ததவர் என்பதும் அதில் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள்  என்பது குறித்து நன்கு அறிந்தவர் என்பது இங்கு கு