பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2014


இசையமைப்பாளர் அனிருத் கைதாவாரா?
தனுஷ் நடித்த ‘3’ படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன.



இன்னொரு புறம் சர்ச்சைகளிலும் சிக்கினார். நடிகை ஆண்ட்ரியாவை அனிருத் முத்தமிடுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
தற்போது யூடியூப்பில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த இசை ஆல்பத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அனிருத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அனிருத்திடம், நேரில் விசாரணை நடத்துகிறார்கள். குற்றம், நிரூபிக்கப்பட்டால் அனிருத் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.