பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

சக மாணவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் மாணவியும் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் நீதிமன்றம் அதிரடி
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, முஸ்லிம் மாணவி, சக மாணவர்களுடன் சேர்ந்து, நீச்சல் வகுப்பில் பங்கேற்க வேண்டும்' என, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டில், எட்டு கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில், 5 சதவீதம் பேர், முஸ்லிம்கள். இவர்களில் பலர், தங்கள் மத பாரம்பரியப்படி உடை அணிகின்றனர். ஜெர்மனியின், Frankfurt நகரை சேர்ந்த, 13 வயது முஸ்லிம் மாணவி, பள்ளியில் நடத்தப்படும் நீச்சல் வகுப்பில் பங்கேற்பதை தவிர்த்தாள். இந்த வகுப்பில் பங்கேற்க, பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதை எதிர்த்து, மாணவியின் தந்தை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"மாணவர்கள் மேலாடை இன்றி குளிக்கும் நீச்சல் குளத்தில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த என் மகள், நீச்சல் உடையில் குளிப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, மாணவியின் தந்தை, தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "மத உணர்வுகளை காரணம் காட்டி, இந்த மாணவி நீச்சல் வகுப்பில் பங்கேற்பதற்கு விலக்கு அளிக்க முடியாது' என, தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்பதாக, மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.