பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் தலைமை பூசாரியாக பணிபுரியும் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்றான பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியாக பணிபுரியும் கேசவன் நம்பூதிரி என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மெஹ்ராலி என்ற ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். இருவரும் மது அருந்தி போதையில்
மிதந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பூசாரிக்கு ஒரு இளம்பெண் போன் செய்து தனது வருங்காலம் குறித்து அவருடன் ஆலோசனை செய்யவேண்டும் என கேட்டுள்ளார். உடனெ ஓட்டலின் பெயரை சொல்லி, அவரை அங்கு வருமாறு அழைத்துள்ளார் கேசவன் நம்பூதிரி.
ஓட்டல் அறைக்கு வந்தவுடன், அறையில் மதுபாட்டில்களும், சிகரெட் துண்டுகளும், இரைந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணிடம் கேசவன் நம்பூதிரியும், அவருடைய நண்பரும் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த இளம்பெண் பின்னர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து கேசவன்நம்பூதிரியையும், அவருடைய நண்பரையும் கைது செய்தனர்.
பத்ரிநாத் கோவில் நிர்வாகம் கேசவன் நம்பூதிரியை சஸ்பெண்ட் செய்துள்ளது