பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2014

அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவில் இராஜாங்க துணை செயலாளரான நிஷா தேசாய் பிஸ்வாலின் கருத்துக்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாக காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிஷா பிஸ்வால் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது 37 வருடங்களின் பின்னர் மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.