திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணிநேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் செய்தார். பல மணிநேரமாக வேலை பார்த்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தான் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். |