பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

சோச்சி ஒலிம்பிக் லியூஜ்: கேசவனுக்கு பதக்க வாய்ப்பு இல்லை

ரஷியாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. லியூஜ் போட்டியின் 3-வது சுற்று முடிவில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் 37-வது இடத்தில் உள்ளார்.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதம் உள்ள நிலையில், கேசவனுக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இல்லை.
39 வீரர்கள் பங்கேற்றுள்ள இப்போட்டியின் 3-வது சுற்று முடிவில் சிவ கேசவன் 37-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இது, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிவ கேசவனின் மோசமான செயல்பாடாகும். 2006-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் சிவ கேசவன் 25-வது இடத்தைப் பிடித்ததே அவரது சிறந்த பட்சமாகும்.