பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2014

அமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெறுவது உறுதி - குணதாஸ அமரசேகர 
news
ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை வெற்றி பெறுவது உறுதி .எனவே அந்தப் பிரேரணைக்கு பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார் . 
 
கடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது வெற்றி பெற்றது . அதேபோன்று இப் பிரேரணையும் வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை . அதற்கான செயற்பாடுகளில் அமெரிக்கா மிகவும் தந்திரோபாயமாகவும் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகின்றது .
 
அமெரிக்காவுக்கு இலங்கைத் தமிழர்கள் மீதோ மனித உரிமைகள் தொடர்பிலோ உண்மையான அக்கறை கிடையாது . மாறாக, தமது அரசியல் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அமெரிக்கா இந்த விடயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது .
 
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் புரிந்து பிரபாகரனால் ஏற்படுத்த முடியாமல் போன தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையாகும்.
 
இலங்கைக்கு எதிராக மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையானது நிறைவேற்றப்பட்டதுடன் இலங்கைக்கு பல் வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. அவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் இலங்கை அரசு ஏற்குமா ? இல்லையா? என்பது தெரியாது . எப்படியோ எமக்குப் பாரிய சவால்கள் காத்திருக்கின்றது என்பது மட்டும் திண்ணம் .
 
குறித்த பிரேரணையின் பிரகாரம் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படலாம் . இவ்வாறு வலியுறுத்தப்படும் பட்சத்தில் அதற்கு இலங்கை அரசானது இணங்காவிடின் பொருளாதார தடைவிதிப்பதற்கான முயற்சிகளில் சர்வதேசம் இணங்கக் கூடும் . எப்படியோ எமக்கும் சவால் காத்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்றா