பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். ஆம் ஆத்மியின் அதிரடி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததன் முழுவிவரங்களும் தெரியும் என ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் பிரசாந்த் பூஷன் இன்று டெல்லியில் கூறியுள்ளார்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கனிமொழி, போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், கலைஞர் டிவி எம்.டி. சரத்குமார் மற்றும் கருணாநிதி ஆகியோர் பேசிய டேப் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் உரிய நேரத்தில் எங்கள் கட்சியின் இணையதளத்தில் வெளியிடுவோம். அவர்கள் பேசிய உரையாடல் யாவும் மொபைல் போனில் ரிக்கார்டு செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்பை யார் எங்களுக்கு கொடுத்தது என்பதை நாங்கள் வெளியில் சொல்ல மாட்டோம்,. ஆனால் இந்த டேப் உண்மையானது என்பதை பலமுறை நாங்கள் சோதனை செய்துவிட்டோம்.

கலைஞர் டிவிக்கு கடன் வாங்கிய விவகாரத்தில் பல போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென பூதாகரமாக 2ஜி ஊழலில் கருணாநிதியின் பெயரையும் ஆம் ஆத்மி இழுத்துள்ளதால் திமுகவினர் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணி இன்னும் உறுதியாக நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்தால் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.