பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்டம்; புத்தளம் லீக் வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் புத்தளம் உதைபந்தாட்ட லீக் வெற்றிபெற்றுள்ளது.

புத்தளம் உதைபந்தாட்ட லீக்கிற்கும் அநுராதபுரம் உதைபந்தாட்ட லீக்கிற்குமிடையிலான போட்டி புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. புத்தளம் உதைபந்தாட்ட லீக் 3-0 என்ற கோல் அடிப்படையில் அநுராதபுர உதைபந்தாட்ட லீக்கை வெற்றிகொண்டது. புத்தளம் உதைபந்தாட்ட லீக் அம்பாறை உதைபந்தாட்ட லீக் அணியுடன் அடுத்த சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ளது.