பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

நரேந்திர மோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்களாக செயல் படுகின்றனர்: அரவிந்த் கேஜிரிவால்

பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கேஜிரிவால் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தல், ஆம் ஆத்மி கட்சிக்கும் அம்பானிக்கும் இடையேயானது அம்பானியின் முகவர்களாக மோடியும், ராகுலும் செயல்படுகின்றனர் என விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி நிறுவனத்துடனான தொடர்பு குறித்து நரேந்திரமோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும்  ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக, இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.