பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

இந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது : வைகோ பேட்டி
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.



அப்போது அவர்,   ‘’  கேரளாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சமூகநீதியை மிக சிறப்பாக பேசி யுள்ளார். அண்ணல் அம்பேத்காரின் கொள்கைகளை தான் பின்பற்றி வருவதாகவும் மோடி கூறி யுள்ளார்.  இந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது.
தமிழக வாழ்வாதாரங்களை வஞ்சித்தும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதல்களுக்கும் உடந்தையாக இருக்கும் காங்கிரஸ் அரசு தற்போது ராணுவ கப்பலையும் இலங்கைக்கு தரதுடிக்கும் காங்கிரஸ் அரசு அதிகார பீடத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். இதே போன்று இலங்கை தமிழர்கள் இறந்ததற்கு காரணம் காங்கிரஸ்  அரசு தான்.
இலங்கை  போரின் போது விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் கொடுஞ்செயல் செய்த அரசு தான் காங்கிரஸ் அரசு இந்த அரசு தூக்கி எரியப்பட வேண்டும். இத்தகைய கொடுஞ்செயல் செய்த காங்கிரஸ் அரசிற்கு தமிழக வாக்காளர்கள் வாக்களிக்காமல் நல்ல தீர்ப்பை தமிழக மக்கள் வழங்குவார்க்ள என்று நம்புகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் பணம் வெள்ளமாக பாய்ந்தாலும் திமுக அதிமுக என்று மாறி மாறி வென்ற காலம் மாறும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஒரு மகத்தான மாற்றம் உருவாகும்’’ என்றார்.