பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

வன்னியில் பொதுமக்களை தாக்கவில்லையாம் 
இறுதிப் போரின்போது பொது மக்கள் காயமடைந்தபோதும், அவர்களைத் திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் திஸார சமர சிங்க இதனைத் தெரிவித் துள்ளார்.
 
இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் மீது ஆஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புதிய போர்க் குற்றச்சாட்டுகளை  முன்வைத்துள்ளது.
இந்தப் போர் தொடர்பில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
எனினும் இதனை முற்றாக நிராகரித்துள்ளதாக ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர், போரின்போது தாம் பாதுகாப்புத் தரப்பினருடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், எந்த வகையிலும் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
போர்க் காலப்பகுதியில் பொது மக்கள் காயமடைந்தமை துரதிஸ்டவசமான விடயம்.ஆனால் திட்டமிட்டு அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்றார் திஸார சமரசிங்க.