பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

மகிந்த போர்க் குற்றவாளி : மாதுலுவாவே சோபித தேரர் 
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டிவரும் நிலையில் இது வரை அதை கடும்போக்காளர்கள் மறுத்து வந்தனர்.


ஆனால் முதன்முறையாக  இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்றுக்கொள்வதாக பௌத்த துறவி ஒருவர் தெரிவித்துள்ளார். கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது. இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாங்கள் விட்ட தவறின் காரணமாகவே இன்று ஜெனீவா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.