பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

    "ஈழத் தமிழர் பிரச்னைக்கு கருணாநிதிதான் தீர்வு காணமுடியும்'கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

     ஈழத்தமிழர் பிரச்னைக்கு கருணாநிதியால் மட்டுமே தீர்வு காணமுடியும். சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்படும்போது அதற்குத் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொள்வதுபோல, இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

தயாநிதி மாறன்: பிரதமராகவேண்டும் என்று ஜெயலலிதா பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது.
தஞ்சை மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது திமுகவின் கொள்கை. கடந்த 1972-ஆம் ஆண்டு மாநில சுயாட்சிக் கொள்கைக்கு திமுக தலைவர் அரசு அங்கீகாரம் கொடுத்தார். மாநில சுயாட்சி கிடைத்திருந்தால் கச்சத்தீவு நம்மை விட்டுப் போய் இருக்காது.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு: இலங்கை தமிழர்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். திமுக என்பது மிகப்பெரிய இயக்கம். தமிழ் மொழிக்காக தொடர்ந்து திமுக போராடி செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்துள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலர் துரை முருகன்: ஓட்டுக்காகவோ, பதவிக்காகவோ இந்த இயக்கம் தோன்றவில்லை. தமிழுக்காகவும், சுயமரியாதைக்காகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இது என்றார் அவர்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி:
தேர்தலை மட்டும் நம்பியிருக்கும் இயக்கம் அல்ல நாம். சமூக நீதிப் போராட்டத்தில் தேர்தலும் ஒரு களம். நீண்ட யுத்தத்தில் பல்வேறு களங்களில் தேர்தல் முக்கிய களமாகும். சமுதாயப் புரட்சிக்கு போர்ச் சங்கு ஊத வேண்டிய தருணம் இது என்றார் வீரமணி.
இணையதளம் தொடக்கம் ரரர.ஈஙஓஊஞதடஉஞடகஉ.இஞங என்ற பெயரில் திமுகவுக்கான புதிய இணையதளத்தை திருச்சியில் நடைபெற்ற 10வது மாநில மாநாட்டின் நிறைவில் தொடங்கிவைத்தார் திமுக தலைவர் மு. கருணாநிதி.
இந்த இணையதளத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் கடிதங்கள், பேட்டிகள், சொற்பொழிவுகள், தீர்மானங்கள், தலைமைக் கழக அறிவிப்புகள் அனைத்தும் இடம்பெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் 2014 மக்களவைத் தேர்தலுக்கும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குமான தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.மாநாட்டில் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனர் என். ஆர். தனபாலன், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சித் தலைவர் பொன்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.