பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2014

ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம்.  வருவார்கள் இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று தனது 69–வது பிறந்த நாளை கொண்டாடினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. தரப்பில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரிய வில்லை. ஒரு வேளை மத்திய அரசு பிரச்சினைகளுக்காக அவர் அணுகி இருந்தாலும் பிரதமரால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் ஒரு தபால்பெட்டி மாதிரிதான். அவரால் தபால்களை டெலிவரி செய்யத்தான் முடியும்.மோடி அலையை பயன்படுத்தி ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம். வருவார்கள் என்று நம்புகிறோம். பா.ம.க.வுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.