பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

தில்லியில் ரிங்ரோடு பைபாஸ் அமைத்ததில் ரூ.184 கோடி ஊழல்

2010ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் ஆட்சி காலத்தில் காமன்வெல்த் போட்டிகளுக்காக ரிங்ரோடு பைபாஸ் சாலை அமைத்ததில் ரூ.184 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வர் கேஜ்ரிவால் அரசால் அமைக்கப்பட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2 பகுதிகளாக ரிங் ரோடு பைபாஸ் அமைக்கும் பணிக்காக ரூ.407 கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.184 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.