பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாளருக்கு கொலை அச்சுறுத்தல்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை சம்பவத்தின் பிரதான சாட்சியாக உள்ள ரெயீனா கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
அச்சறுத்தலுக்கு உள்ளான நீதிமன்றம் அல்லது பொலிஸ் உயர் பீடம் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டால் அவருக்கான முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு பொலிஸார் தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை சம்பவத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் அவருடைய தங்கைக்கு தொலைபேசி ஊடாகவும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வரும் இனந்தெரியாத நபர்களினாலும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேற்படிச் சம்பவத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்தவகையில் உள்ளது. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் எதும் பெறப்பட்டுள்ளதா என யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த எஸ்.எஸ்.பி:- சீருடை அணிந்த பொலிஸாருக்கு உயர் அதிகாரிகளின் உத்தரவினை பெற்றுக்கொண்டே நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
எனவே மேற்படிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தினை நாடி தமக்கான பாதுகாப்பினை கோர முடியும். இவ்வாறு நீதிமன்றத்தினால் குறித்த நபருக்கான பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவிட்டாலோ, அல்லது பொலிஸ் உயர் அதிகாரிகளினால் எமக்கு அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டல் மட்டுமே அவருக்கான பாதுகாப்பினை பொலிஸார் வழங்குவார்கள்.
மேலும் மேற்படிச் கொலை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக எந்தவிதமான மேலதிக தகவல்களும் பொலிஸாரினால் பெறப்படவில்லை. பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.