பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2014

எதிர்ப்பு கோஷம்  : நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய கெஜ்ரிவால்
டெல்லியில்,  முதல்&மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆட்டோ டிரைவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சில டிரைவர்கள், கெஜ்ரிவால் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆத்திரத்துடன்
கோஷங்களை எழுப்பினார்கள். பேசி முடித்ததும் ஆட்டோ டிரைவர்களுடன் கலந்துரையாட அவர் திட்டமிட்டு இருந்தார்.


ஆனால், எதிர்ப்பு கோஷங்களால் கோபம் அடைந்த கெஜ்ரிவால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு மேடையில் இருந்து வெளியேறிவிட்டார். முன்னதாக அவர்கள் மத்தியில் பேசிய அவர், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காதீர்கள் என்றும், அதிக ஆதாயம் கிடைக்காத பகுதிக்கு செல்ல மறுக்காதீர்கள் என்றும் அறிவுரை வழங்கினார்.
தனது நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்று குறை கூறுபவர்கள் மீது தாக்குதல் தொடுத்த கெஜ்ரிவால், Òநண்பர்களே கடந்த ஒரு மாதத்தில் எந்த போலீஸ்காரராவது உங்களை நிறுத்தி லஞ்சம் கேட்டார்களா, சொல்லுங்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்டோ டிரைவர்கள் ஆம்