பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2014

யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை! மூன்று மாத காலக்கெடு விதித்தார் அமைச்சர் பொ.ஜங்கரநேசன
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கான காரணிகள், அவற்றிற்கான மாற்று வழிகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
மாகாண சுற்றாடல் அமைச்சிற்கும் வணிக சங்கங்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன்,
இலங்கையில் சூழல் பாதிப்பென்பது அதிகமாக காணப்படுகிறது. அதிலும் யாழ்ப்பாணத்திலே கூடுதலாக சுற்றாடல் பாதிக்கப்படுகிறது. அதற்கான பிரதான காரணி பொலித்தீன் பாவனை ஆகும். இங்கு மக்களின் அன்றாட வாழ்வின் பெரும்பங்கு பொலித்தீன் பாவனையை சார்ந்துள்ளது. இதனால் சூழல் பாதிப்பை விட மக்கள் பாதிக்கப்படுவதே அதிகம் எனலாம்.
இலங்கை வர்த்தமானி அறிவிப்பின்படி மெல்லிய பொலித்தீன்பை பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. பொலித்தீன் என்பது சிக்கலான வளம் ஆகையால் இந்த சிக்கலான வளத்தை பயன்படுத்துவதால் மக்களும் பவ்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
மேலும் அநேகமானவர்கள் 20 மைக்ரோம் குறைவான எடையுள்ள பொலித்தீன் பைகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை இல்லாமல் செய்வதனை விட இதற்கு மாற்று வழியினையும் ஆராய வேண்டும்.
அந்த வகையில் 20 மைக்ரோம் குறைவான எடையுள்ள பொலித்தீன் பாவனை காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை போன்றன சட்ட விரோதமாகையால் அதனை இல்லாமற் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது பொலித்தீன் பாவனை இயன்றளவு குறைக்கப்பட வேண்டும். அதற்கு உகந்த வழி விழிப்புணர்வே. அந்த வகையில் நாம் சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறந்த இடம் பாடசாலை ஆகும். மாணவர்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் அது மக்களையும் சென்றடையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
அத்துடன் இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு மாத்திரம் வர்த்தகர்களுக்கு பொலித்தீன் பாவனைக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
யூன் 5ம் திகதியிலிருந்து இந்த பொலித்தீன் பாவனை குறைய வேண்டும். எனவும் 20 மைக்ரோமிற்கு குறைவான எடையுள்ள பொலித்தீன் பாவனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டு;ம் எனவும் அவர் தெரிவித்தார்.