பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2014

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக!- காங்கிரஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக தமிழக அரசாங்கம் இவ்வாறு தீர்மானிக்க முடியாது.
இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.