பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2014

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை நடத்த வேண்டும் என்ற பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய கூட்டத்தில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலை மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான கப்பல் சேவையின் ஒரு கட்டமாக இந்த யோசனை கருதப்படுகிறது.
இந்த யோசனை இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என வடக்கு மாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனங்கள் வடபகுதிக்கான சேவைகளை நடத்த மிகுந்த அக்கறை காட்டி வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக பிரதிநிதி வீ. மகாலிங்கம் தெரிவித்திருந்தார்.