பக்கங்கள்

பக்கங்கள்

9 பிப்., 2014

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு

கமுதி பசும்பொன் கிராம முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
செனையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா மதுரை விமான நிலையியத்தில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கமுதி செல்கிறார். மதுரை வந்து இறங்கிய முதல்வர் ஜெயலலிதாவை மாவட்ட ஆட்சியர் எல். சுப்ரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா, மதுரை மாநகர காவல் ஆணையர் சஞ்சை மாத்தூர், மதுரை ஊர்க காவல் காண்காணிப்பாளர் பாலகிருஷ்னன மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர். கல்யாணி மதிவாணன், ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் புறப்பட்டு சென்றார்.