அராலி சில்வெஸ்ரார் இளைஞர் கழகம் இளைஞர் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரில் வெற்றி பெற்றுச் சம்பியனானது சென்.நியூ ஸ்ரார் இளைஞர் கழகம்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அராலி சில்வெஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம் பெற்ற இந்த இறுதியாட்டத்தில் அராலி ஞானவைரவர் இளைஞர் கழக அணியை எதிர்த்து சென்.நியூஸ்ரார் இளைஞர் கழக அணி மோதியது.
இரு அணியினரும் தமது அணிக்கான கோல்களைப் பெற வேண்டும் என்ற நோக்கோடு கடுமையாக மோதிக் கொண்டதால் ஆட்டம் விறுவிறுப்பாகக் காணப்பட்டது.
ஆட்டம் முடிவுற்றபோது இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்தன. அதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக இரு அணிகளுக்கும் தலா 5 சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வழங்கப்பட்டன. அதில் சென்.நியூஸ்ரார் இளைஞர் கழக அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகத் தெரிவாகியது.
சிறந்த கழகமாக அராலி பாரதி இளைஞர் கழக அணி தெரிவாகியது. சிறந்த வீரனுக்கான விருதை சென்.நியூஸ்ரார் இளைஞர் கழக அணி வீரன் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை சென்.நியூ ஸ்ரார் இளைஞர் கழக அணி வீரன் கருணன் கலக்சன் பெற்றுக் கொண்டார். அதிக கோல்களை அடித்த வீரருக்கான விருதை துணைவி செனிஸ்ரார் இளைஞர் கழக அணி வீரன் லுகிர்தன் பெற்றுக் கொண்டார்.
தொடர் ஆட்ட நாயகன் விருதை சென்.நியூஸ்ரார் இளைஞர் கழக அணி வீரன் கஜறூபன் தட்டிச் சென்றார். தொடரின் நன்னடத்தை வீரனாக அராலி பாரதி இளைஞர் கழக அணி வீரர் பத்மநாதன் சிந்துஜன் தெரிவானார். |