பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

பள்ளி குழந்தைகள் கடத்தி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்
 

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் பள்ளிக்கு சென்ற மாணவியும், அவரது சகோதரனும் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக வேன் ஓட்டுநர் மோகன் ராஜ், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2010ல் நவம்பரில் வேன் ஓட்டுநர் மோகன்ராஜ் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த வழக்கில், குற்றவாளியான மனோகரனுக்கு 2012ல் கோவை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கோவை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனோகரனின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த தண்டனையை உறுதி செய்தது.