பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2014

நட்பு ரீதியிலான மோட்டார் சைக்கிள் சவாரி யாழை வந்தடைந்தது

இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மோட்டார் சைக்கிள்  சவாரி நேற்று பிற்பகல் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.

1800 சக்தி வளம் கொண்ட மோட்டார் வண்டியுடன் பயணித்த மலேசியா ஓட்டுநர்கள் ஒன்பது பேர் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தனர்.

மேற்படி இவர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ் மாவட்டபாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் எற்பாடு செய்யப்பட்டிருந்தன.

51ஆவது பாதுகாப்புப்படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிக்கேடியர் சூல அபநாயக்க தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொழும்பில் ஆரம்பமாகிய 180 கிலோ மீற்றர் தூரம் பயணமுடைய இந்தச்சவாரி இரண்டு மாதகாலப்பகுதிவரை இலங்கையில் உள்ள 25 மாவட்டங்கள் ஊடாகவும் பயணித்து மீண்டும் கொழும்பை வந்தடையவுள்ளது.

இதனுடாக இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திகள், வடக்கு கிழக்கில் நடைபெற்று வரும் அபிவிருத்தித்திட்டங்கள்,சுற்றுலா மேம்பாடுகள் நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த பயணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=837032793928120159#sthash.waldJjLa.dpuf