பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2014

நடிகை ஊர்வசி 2–வது திருமணம்!

பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000–ம்
ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார்.


இவர்கள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தனர். 2008–ல் விவாகரத்து பெற்றார்கள். அதன் பிறகு மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்ற பெண்ணை மணந்தார். மகள் தேஜா லட்சுமி மனோஜ் கே.ஜெயனிடம் வளர்கிறார்.
இந்த நிலையில் ஊர்வசி கட்டுமான தொழில் அதிபர் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக மலையாள பத்திரிகையொன்றில் பேட்டி அளித்துள்ளார்.