பக்கங்கள்

பக்கங்கள்

31 மார்., 2014

நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம் 
 நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  உடல் நலக் குறைவால் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது.
பாத்ரூமிலும் தவறி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குணமானார். ஆனாலும் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.


இந்த நிலையில் மனோரமாவுக்கு நேற்று மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விட திணறினார். உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல் பரிசோதனையும் நடந்தது.


மனோரமா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலையும் டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற போராடுகிறார்கள்.